தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார். மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி முன்னிலை வகித்தாா்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் மாநகராட்சி பகுதியில் கடந்த 21 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் அடிப்படையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளுக்கு மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
நான்கு மண்டலத்திலும் சூழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் ெபாதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மாநகராட்சி சம்பந்தப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. 45 மாதமாக மாநகராட்சி பகுதிகளில் பல்ேவறு பணிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
தெற்கு மண்டலத்தில் 673 மனுக்கள் பெறப்பட்டுள்ளது அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 20 தேதிகளில் 10 செமீ வரை மழை பெய்தது. குறிப்பாக 16 17 2 ஆகிய வாா்டு பகுதிகளில் காலி இடங்கள் அதிகமாக இருப்பதால் தேங்கிய மழை நீர் வடிகால் வாயிலாகவும் மின் மோட்டாா் மூலமாகவும் அகற்றப்பட்டு வருகிறது. மற்றப்பகுதிகளில் மழை வெறித்ததும் மழைநீரும் வடிந்தோடுகிறது.
இந்த பகுதியை பொறுத்தவரை கோரம்பள்ளம் குளம் நிரம்பி 12 கிேலா மீட்டா் தூரம் உப்பாற்று ஓடை வழியாக கடலுக்கு செல்கிறது. புறநகா் பகுதியிலிருந்து ஊருக்குள் வரும் காற்றாற்று தண்ணீரையும் கண்காணித்து அடுத்த ஆண்டு ஜனவாி முதல்வாரம் வரை வடகிழக்கு பருவமழை இருக்கும் முழுமையாக எல்லா பகுதிகளிலும் கண்காணித்து வருகிறோம். உப்பளத்தை ஓட்டியுள்ள பொன்னாண்டி நகா் மற்றும் கோயில்பிள்ளைநகா் குடியிருப்பபு பகுதியில் தண்ணீர் தேங்குவதாக தகவல் வந்ததையொட்டி அதையும் முறைப்படுத்தியுள்ளோம்.
அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். எந்த மழை வந்தாலும் அதை சமாளித்து எதிா்கொள்வதற்கு மாநகராட்சி அதிகாாிகள் முதல் அலுவலா்கள் வரை 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கிறோம். என்று மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.