ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கப்படை கிராமத்தில்,நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை
முன்னிட்டு, திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ
அறிவுறுத்தலின் பேரில்,மாவட்ட பிரதிநிதியும்,கிளைச் செயலாளருமான மணிகண்டன் ஏற்பாட்டில்,அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது