சுதந்திரப் போராட்ட வீரர் பாண்டியபதி தேர்மாறனின் பிறந்தநாள் விழா
வை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி தேர்மாறன் 273 வது பிறந்தநாள் விழா அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய போது இதனை தெரிவித்தார்
ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திற்கு குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஊமத்துரை மருது பாண்டியர் ஆகியோரின் வழியில் சுதந்திரப் போராட்டத்திற்கு போராடிய தூத்துக்குடியை சேர்ந்த பாண்டியபதி தேர்மாறனின் 273 ஆவது பிறந்தநாள் விழா இன்று தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி குரூஸ் பர்னாந் நற்பணி மன்றம் நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற தேர் மாறனின் பிறந்தநாள் விழாவிற்கு கோரமண்டல் சமூக நற்பணி மன்ற முன்னாள் தலைவர் பகத்சிங் தலைமை தாங்கினார்.
பனிமய மாதா பேராலய அதிபர் ஸ்டார்வின் அடிகளார் ஆசியுரை வழங்கினார் அனைவரையும் குருஸ் பர்நாந் நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட் வரவேற்று பேசினார். தூத்துக்குடி வரலாறு குறித்து புத்தகம் எழுதிய நெய்தல் அண்டோ சிறுபுரையாற்றினார்.
இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு தூத்துக்குடி லசால் பள்ளி வளாகத்தில் உள்ள தேர் மாறனின் நினைவிடத்தில் மாலை அணிவிக்கும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கல்வி உதவித்தொகை அரிசி வேஷ்டி சேலை மற்றும் டிபன் பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை மதிக்க கூடிய அரசாக திமுக அரசு செயல் பட்டு வருகிறது அந்த வகையில் தான் சுதந்திர போராட்ட வீரர் பாண்டிபதி தேர் மாறனின் திருவுருவ படம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படங்களோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மேலும் தேர்மாறனின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
முன்னதாக பாம்பன் சமுதாயத் தலைவர் பவுல்ராஜ், திரேஸ்புரம் பரவர் ஊர் கமிட்டி செயலாளர் ராஜ், நெய்தல் எழுத்தாளர் இயக்க தலைவர் கமலாபன் வாஸ் அன்னை பரதநல சங்க தலைவர் சேவியர் வாஸ், பேராசிரியர் பாத்திமா பாபு, கோரமண்டல் ரோமால்டு, மதிமுக நக்கீரன், மீனவர் வாழ்வுரிமை பேரவை சந்தியா, பாரம்பரிய நாட்டுப்படகு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ரீகன் குரூஸ் பர்னாந் நற்பணி மன்ற செயலாளர் சசிகுமார் அமளி நகர் பிரேசில் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்..
இந்த நிகழ்ச்சியில் குரூஸ் பர்னாந் நற்பணி மன்ற அமைப்பாளரும் முன்னாள் மாவட்ட கூட்டுறவு சங்க தலைவருமான எல். எட்வின் பாண்டியன், மன்ற பொருளாளர் டெரன்ஸ், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், திமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில், முருக இசக்கி,40வது வார்டு டென்சிங்,40வது வார்டு திமுக செயலாளர் ஹிலரி,திரேஸ்புரம் பகுதி சிறுபான்மை துணை அமைப்பாளர்.ஜஸ்டின், வட்ட பிரதிநிதி திமுககமல் நிர்மலா,பனிமய மாதா பேராலயம் லாசர், திமுக 40வது வார்டு இளைஞர் அணி கெய்சன், ரீகன், சுஜய் நிஷாந்த், அஜித், ரியான், லூர்து அஸ்வின், கல்யாண சுந்தரம், அலாய், பிரைட்டர், சுரேஷ், லேன்,சேவியர் வளன் ஆண்ட்ரூஸ் அரவிந்த் வர்கிஸ் செனிஸ் ஜேபி தினேஷ் ஆனந்த கலந்து கொண்டனர். முடிவில் வினோஜின், நன்றி கூறினார் நிகழ்ச்சியை அண்டோ தொகுத்து வழங்கினார்.