தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர். ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கு, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த 75 வயது பெண்மணிக்கு திடீர் இருதய வலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக உறவினர் மூலம் அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த இருதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் அப்பெண்மணிக்கு இதய துடிப்பு மிக குறைவாக இருப்பதாகவும் அவசர நிலையில் ஆஞ்சியோகிராம் செய்யவேண்டும் என பரிந்துரை செய்தார்.
மேலும் உறவினர்களின் ஒப்புதலின்படி அப்பெண்மணிக்கு ஆஞ்சியோ கிராம் செய்யப்பட்டதில் அவருக்கு இதயத்துக்கு இரத்தம் வழங்கும் இரத்த நாளங்கள் செயலிலந்து உள்ளதை அறிந்து துரிதமாக தற்காலிக இருதய பேஸ்மேக்கர் (TPI) பொறுத்தி உயிரை காப்பாற்றினார்.
மேலும் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனையின் இருதய மருத்துவ சிறப்பு நிபுணர் மருத்துவர் இளங்குமரன் தலைமையில் மருத்துவகுழுவை கொண்டு உலகத்தரம் வாய்ந்த கேத்லாப் அரங்கில் உயர்தர உபகரணங்களை பயன்படுத்தி இருதய நுண் துளை இரத்த குழாய் மூலம் Single Chamber Leadless Pacemaker என்னும் மிக சிறிய நிரந்தர பேஸ்மேக்கர் கருவியானது மிக துளியமாகவும், குறுகிய நேரத்திலும் இரத்த குழாய் வழியாக இருதயத்திற்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
Leadless பேஸ்மேக்கர் என்பது மிகவும் சிறிய வடிவம் கொண்டது. மேலும் இதில் பேட்டரி கிடையாது, அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
சிகிச்சைக்கு பின்னர் அப்பெண்மணிக்கு சுவாச நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இருதய துடிப்பு சீராக இருந்தது மேலும் அவருக்கு உரிய மருத்துவம் அளித்து நலமோடு வீடு திரும்பினார். தனக்கு மறுபிறவி தந்த ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை இருதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன், மற்றும் மருத்துவ குழுவினருக்கு தனது மனமார்ந்த நன்றியினை அப்பெண்மணி தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் முதன்முறையாக அதிநவீன் தொழில்நுட்பம் கொண்ட பேஸ்மேக்கர் போன்ற கருவி பயன்படுத்தி இருதய சிகிச்சை அளிப்பதில் ஸ்ரீகாமாட்சி மகுத்துவமனை முன்னோடியாக உள்ளது என்பது பெருமைக்குரியது.
இந்த நிகழ்வில் மருத்துவமனை மூத்த ஆலோசகர் மரு. மோகன், துணை மருத்துவ கண்கணிப்பாளர் மரு. தீபக் தாராயணன், மற்றும் இருதய மருத்துவம் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் (Electrophysiology) மகுத்துவர் மரு. அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.