தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

அம்பேத்கர் 69-ஆவது நினைவு நாள்: தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் மரியாதை!..

தாராபுரம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புரட்சியாளர் மற்றும் சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69-ஆவது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. நினைவு நாளை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, வீரவணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் நா. தமிழ் முத்து தலைமையேற்றார். நகரச் செயலாளர் செந்தில்குமார், பொதுச் செயலாளர் தனபால் ஆகியோர் முன்னிலையில்இருந்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர், ஆற்றல் வளர்ச்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் சுடர் வளவன், சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர், நகர மன்ற தலைவர் பாபு கண்ணன், நகரச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பல்வேறு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், திராவிடர் கழகம், பௌஜன் சமாத் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, ஆதித் தமிழர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், அம்பேத்கரை நினைவுகூர வந்த பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மொத்தம் 70-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஏற்பாட்டாளரான முன்னாள் மாவட்ட செயலாளர் நா. தமிழ் முத்து உரையாற்றியபோது, “இந்திய அரசியலமைப்பின் முதன்மை வடிவமைப்பாளரும், சமூகநீதியின் முன்னோடியுமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு நாள் நாடு முழுவதும் மரியாதையுடன் அனுசரிக்கப்படுகிறது. சமூக சமத்துவம், கல்வி உரிமை, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வு ஆகியவற்றிற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் அம்பேத்கர்,” என்றார்.

மேலும் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பது நாம் சமுதாய நல்லிணக்கத்தை சீர்அலித்த நாள் எனவும் மேலும் தாராபுரத்தில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் எனவும் இந்த நினைவு நாளில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *