மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.
மதுரையில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகவும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் துணைக் கோயிலாகவும் உள்ளது தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், இங்கு சிவ பெருமான் முக்தீஸ்வரர் என்ற திருப் பெயரிலும், அம்பாள் மரகதவல்லி என்ற திருப்பெயரிலும் அருள்பாலிக்கின்றனர்.

இந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கின. திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்ததையடுத்து, குடமுழுக்கு யாக பூஜைகள் நிறைவடைந்தன.

இதையடுத்து, கடம் புறப்பாடு தடை பெற்றது. யாக பூஜையில் வைக்கப்பட்டிருந்த திருக்குடங்கள் கோயிலைச் சுற்றி வந்து, கோயில் விமானங் களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இதன் நிறைவில், இன்னிசை வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க குடமுழுக்கு நடைபெற்றது. அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை தெற்குத் தொகுதி எம். எல்ல. ஏ. பூமிநாதன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் சுரேஷ் கண்காணிப்பாளர்கள், உபயதாரர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *