எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே இறந்து கடற்கரையில் ஒதுங்கிய டால்பின் பரிசோதனைக்கு பின் வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொட்டாய் மேடு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இதனை அறிந்த திருமுல்லைவாசல் கடலோர காவல் குழும போலீசார் அளித்த தகவலின் பேரில் வனச்சரகர் அயூப் கான் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று டால்பினை கைப்பற்றி மாதானம் கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் நிவேதிதா வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு கடற்கரை ஓரம் உள்ள மேட்டுப்பகுதியில் டால்பினை புதைத்தனர். தொடர்ந்து கடலோர காவல் குழுமா போலீசார் காயம் எதுவும் இல்லாத நிலையில் டால்பின் இறந்து கரை ஒதுங்கியது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.