இ-பைலிங் முறையை கட்டாயமாக்கியதை கண்டித்து பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025 முதல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நீதிமன்றம் வளாகம் முன்பு நடைபெற்றது இப்போராட்டத்திற்கு பாபநாசம் வழக்கறிஞர் சங்க தலைவர் கம்பன் தலைமை வகித்தார் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ஹாஜி முகம்மது உண்ணாவிரத போராத்தை குடந்தை வழக்கறிஞர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் அறிவழகன் துவக்கி வைத்தார்.

போராட்டத்தில் தஞ்சை வழக்கறிஞர் சங்க தலைவர் திராவிட செல்வன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகர், சங்கத் துணைத் தலைவர் ராஜா, சங்கத் துணைச் செயலாளர் அண்ணாதுரை, சங்க ஒருங்கிணைப்பாளர் நிஜார் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நெய்வேலி சங்கத் தலைவர் ஞானபாண்டியன் , முன்னாள் அரசு வழக்கறிஞர் சதீஷ்குமார், குடந்தை சங்க முன்னாள் துணைத் தலைவர் இளங்கோவன் ,வழக்கறிஞர்கள் ரேணுகா, சத்யராஜ், சரவணன், சங்கீதா, சதீஷ்,
மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *