கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் கனிமவள கொள்ளை, கோவில் சொத்துக்கள் அபகரிப்பு ஆகியவற்றை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் பேரரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரசாணை எண்.540 மற்றும் 64 ன் படி சாலை ஆக்கிரமிப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என்றும், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் பணிகள் குறித்து மாதம் ஒரு முறை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கோவில்பட்டியில் உள்ள அரசு நூலகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், தனியார் சந்தை வழக்கு, இளையரசனேந்தல் சேவை சாலை வழக்கு ஆகியவற்றை அரசு சார்பில் விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும், சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் கனிமவள கொள்ளை, கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதை தடுக்கவும் வலியுறுத்தி தமிழ் பேரரசு கட்சி சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்ப்பேரரசு கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மு.கணேசன், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் லட்சுமணபாண்டியன், இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து, மாவட்ட பொருளாளர் குமார், குருநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ராஜேசுகண்ணா, பரமசிவம், சுதாகர், பால்ராஜ், ராஜா, ராஜசிம்மன், முருகன், விவசாய அணி தலைவர் அருமைராஜ், நாம் தமிழர் கட்சி காமநாயக்கன்பட்டி பொறுப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *