அறச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ் நாடு அரசு மற்றும் நவரசம் கல்லூரி இணைந்து நடத்திய கல்லூரி சந்தை கண் காட்சி நடைபெற்றது.
அறச்சலூர் நவரசம் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் கல்லூரி சந்தை எனும் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறச்சலூர் நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
கல்லூரிமுதல்வர் கனிஎழில் வரவேற்றார். செயலாளர் கு.செந்தில்குமார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, தாளா கொண்டனர்.
இதில் கார்த்திகேயன் நவரசம் அகாடமி பள்ளியின் தாளாளர் அருண்கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரிநிர்வா முகிகள் ரிப்பன்வெட்டிகண் காட்சியைத் தொடங்கி வைத்தனர்.
இக்கண்காட்சியில் ஈரோடு மொடக்குறிச்சி, சென்னிமலை, பெருந்துறையைச் காங்கேயம் திருப்பூர் சேர்ந்த மகளிர் 30க்கும் மேற்பட்ட சுய உதவி குழுவினர் கலந்து கொண்டு, தங்களின் உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனைச் செய்தனர். இக்கண்காட்சியில் சுயஉதவிக் குழுவினரின் கைவினைப் பொருட்கள், மண்பாண்டங்கள் பவானி ஜமுக்காளம், சென்னிமலை பெட் ஷீட், கைத்தறி, காட்டன் சேலைகள், கால்மிதியடிகள், மரச்செக்கு எண்ணெய்கள், மரச்சாமான்கள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள்,பாக்கு மட்டை பொருட்கள், சிறுதானியங்கள், சிறு தானிய உணவு பொருட்கள், தேன், இயற்கை விளைவிக்கப்பட்ட பழங்கள், வேர்க்கடலை, மஞ்சள், குண்டு வெல்லம், மற்றும் நாட்டுச் சர்க்கரை போன்ற ஏராளமான பொருட்கள் விற்பனைச் செய்யப்பட்டன.
கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலக பணியாளர்கள், உதவியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொருட்களைவாங்கி பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) மு.பெருமாள், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மேலாளர் சு.உதயகுமார், மாவட்ட வளநபர் (பண்ணைசாரா) பி.கவிதமலர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள் கலந்து
அறச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மற்றும் நவரசம் கல்லூரி சார்பில் 3 நாள் நடைபெறும். கல்லூரி சந்தை கண்காட்சியின் தொடக்க விழா கல்லூரியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.