தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி அறப்போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில கவுரவ தலைவர் எம்.பி.ராமன் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் பொன். மணிகண்டன் ஆகியோருடன் விவசாயிகளும் சேர்ந்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.