தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழைக்காலங்களில் சில தெருக்களில் காண்களில் கழிவு நீர் செல்லாமல் வீடுகளில் தேங்கி இருப்பதாக போலல்டன் புரம் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு புகார் அளித்தனர் இதனை அடுத்து போல்டன் புரம் மூன்றாவது தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் கான்களை உள்ள அடைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜபாண்டிக்கு உத்தரவிடப்பட்டது
அதன் அடிப்படையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி சுகாதாரத்துறை ஆய்வாளர் மற்றும் பணியாளர்களுடன் நேரில் சென்று அந்தப் பகுதியை பார்வையிட்ட போது கழிவு நீர் காண்களில் சுமார் 4 அடி உயரத்திற்கு மணல் தேங்கி அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது உடனடியாக மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக கழிவுநீர் கான்களில் உள்ள மணல்களை அப்புறப்படுத்த களத்தில் இறங்கினார்கள் சுமார் 20 அடி நீளத்துக்கு கழிவுநீர் கான்களில் 5 அடிக்கு மேல் கழிவுநீர் கான்களில் தேங்கியிருந்த மணல் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டது
அந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் சென்று பார்வையிட்டார் அப்போது தொடர்ந்து இந்தப் பகுதி முழுவதும் கழிவு நீர் கான்களை முழுவதுமாக உள்ள அடைப்புகளை சரி செய்ய வேண்டும் தேங்கி கிடைக்கும் கழிவுகளை முழுவதும் அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் அறிவுறுத்தினார்
அப்போது அங்கு பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர்களை மேயர் ஜெகன் பாராட்டினார் இதுபோல பணிகளை உங்களைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது தைரியத்துடன் பணிகளை செய்து கால் அடைப்புகளை சரி செய்து உள்ளீர்கள் என்று பணிகளில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை மேயர் ஜெகன் பாராட்டினார்