திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவராகவும், காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார். 2015-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பி.ஆர். பாண்டியன்கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கண்டித்தும் பி.ஆர். பாண்டியனை விடுதலை செய்யக்கோரியும், தமிழகத்தை விட்டு ஓஎன்ஜிசி நிர்வாகம் வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி . திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம் கிராமத்தி்ல் அனைத்து அரசியல் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் மத்திய மாநில் அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்