சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அறிவித்தது இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாமக வடக்கு மாவட்ட செயலாளர் வேணு.பாஸ்கரன் தலைமை தாங்கினார், தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். இதில் தஞ்சை மண்டல செயலாளர் மயிலாடுதுறை எஸ்.ஏ.அய்யப்பன், பாமக மகளிர் சங்க செயலாளர் ஷர்மிளாதேவி சுரேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வலங்கை என்.மாரிமுத்து, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கணேச.சண்முகம், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.ஆர்.உலகநாதன், பாமக மாவட்ட துணை செயலாளர் எம். எம்.சண்முகவேல், மாவட்ட மகளிர் சங்க செயலாளர் தமிழ்செல்வி அய்யப்பன் உள்ளிட்டோர் சிறப்பு ரை ஆற்றினார்கள்.

இதில் மாநில,மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினார்கள். அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட டிஆர்ஒ கலைமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *