மதுரையில் ஜாக்டோ – ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி – உண்ணாவிரதப் போராட்டம்.

மதுரை மாவட்ட ஜாக்டோ–ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் சந்திரபோஸ், பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், பீட்டர் ஆரோக்யராஜ் ஆகியோர் தலைமையில்,
முதலமைச்சர், 2021 தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி, லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர் களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட உரிமை மீட்பு உண்ணாவிரதம் மதுரை பழங்காநத்தம் ரவுண்டாணாஅருகே நடைபெற்றது.

வாழ்வாதார கோரிக்கைகள் 01.04.2003க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு அமல்படுத்தப்பட்ட பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்
கள், கண்காணிப் பாளர்கள், தலைமைச்செயலக அலுவலர்கள், களப்பணியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் ஊதிய முரண் பாடுகளை களைய வேண்டும். கல்லூரிப் பேராசிரியர் களுக்கான சிஏஎஸ் நிலுவை, பதவி உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்
துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30%க்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.


கருணை அடிப்படை நியமனத்திற்கான உச்சவரம்பு 5% ஆக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25% ஆக உயர்த்த வேண்டும்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்களுக்கான 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், என்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது கோரிக்கைகளை மாநில ஒருங்கிணைப் பாளர் முருகையன், துவக்கி வைத்தார் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஏ. டி. செந்தாமரைக் கண்ணன் சிறப்புரை
யாற்றினார், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கள் சங்க மாநில பொருளாளர் கார்த்திகேயன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *