ஆசிரியருக்கு விருது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் சிறந்த கட்டுரை நூலுக்கான விருது வென்றுள்ளார்.
திருச்சியில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இயங்கி வரும் எம்.ஜே.பதிப்பகம் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான ஆதலையூர் சூரியகுமார் எழுதிய ‘அன்னைத் தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் நாயன்மார்கள்’ என்ற நூல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. திருச்சியில் நடைபெற்ற விழாவில் கௌரா பதிப்பகத்தின் உரிமையாளர் ராஜசேகரன், எம்.ஜே. பதிப்பகம் ஜெய்கணேஷ் ஆகியோர் விருதும் ரூபாய் ஐயாயிரம் ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவித்தனர்.