துறையூர் திமுக மேற்கு ஒன்றியம் பொன்னுசங்கம்பட்டியில் “என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” திமுக பரப்புரை கூட்டம்
அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்
துறையூர் டிச-13
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதி துறையூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் பூத் எண் 236 மேற்கு ஒன்றிய திமுக சார்பில்”என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” பரப்புரை கூட்டத்தை இன்று கழக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்து பரப்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்க கமல், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன்,மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ்,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை,முத்துச்செல்வன், அசோகன், நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன்,முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், பொது குழு உறுப்பினர்கள் கிட்டப்பா, பூபதி, மாவட்ட ஐடி விங் சேகர்,பொறியாளர் அணி கலைச்செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம் வீரபத்திரன் நன்றியுரை ஆற்றினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்