அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது போராட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரமூர்த்தி பெரியசாமி பூவண்ணன் ஜேசுராஜ் கார்த்திகேயன் ராதாகிருஷ்ணன் கருணாநிதி பேராசிரியர் ஸ்டீபன் வேல்முருகன் ஷேக்தாவூத் நம்பிராஜன் ஓய்வுபெற்ற ஆசிரியர் நல்லப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

போராட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி 23 8 2010க்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து விலகளித்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் சாலை பணியாளர்களின் 41 மாத பனி நீக்க காலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் 1/4/2023 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *