விவசாயம் முதுகெலும்பாக உள்ளது மேயர் ஜெகன்.
தூத்துக்குடியில் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாடு வங்கியான நபார்டு மூலம் பெரிசன் பிளாசாவில் விற்பனை கண்காட்சியை மாநகராட்சி மேயர் ஜெகன் துவக்கி வைத்தார்.
மகளிர் சுய உதவிக் குழுவுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பேசுகையில் இந்த விற்பனை கண்காட்சி மூன்று மாதம் நடைபெற உள்ளது 2022 ஆம் ஆண்டு முதல் நெய்தல் விழா துவக்கத்திலிருந்து இந்த கண்காட்சி துவங்கி உள்ளது நெய்தல் விழாவில் நான்கு நாட்களில் பொருட்கள் அனைத்தும் வித்து விடும் புதியதாக தொழில் செய்பவர்களுக்கு ஊக்கப்படுத்துகிறார்கள்
நபார்டு வங்கி. கூட்டுறவு வங்கி தொழில் செய்பவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் நபார்டுவங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது லாபம் கிடைப்பதன் மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்துகிறார்கள். போட்டி நிறைந்த உலகம் அதில் மார்க்கெட் செய்து விற்பனன செய்கிறார்கள்
கடலில் வானத்தீவு பகுதிக்கு சென்று நான் பார்வையிட்டேன். பவளப்பாறை வளர்ப்பதற்கு நிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்துகிறார்கள் .வித்தியாசமான பொருட்கள் விற்பனை செய்கிறார்கள் கண்காட்சியில் உள்ளது 90 நாட்கள் விதவிதமாக பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளார்கள் .
மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் வெற்றி பெற வேண்டும் இதே மாதிரி தொழிலதிபர்களை ஊக்குவிக்க வேண்டும். விவசாயம் அழியாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்று மேயர் ஜெகன் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா. நபார்டு வங்கி பொது மேலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.