கும்பகோணம் :திருவிடைமருதூர் பெரிய பள்ளிவாசல், அல்கரீம் பைத்துல்மால் அறக்கட்டளை,திருவிடைமருதூர் மஸ்ஜிதே மஃமூர் ஜூம்ஆ பள்ளிவாசல்
குடந்தை யூத் ஸ்டார்ஸ் லயன்ஸ் சங்கம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கி ஆகிய இணைந்து நடத்திய பெரிய பள்ளிவாசலில் ரத்த தான முகாம் நடந்தது
முகாமை அல்கரீம் பைத்துல்மால் அறக்கட்டளை, தலைவர் ஜனாப் .சிராஜுதீன், திருவிடைமருதூர் பெரிய பள்ளிவாசல் ,தலைவர் ஜனாப். முபாரக் அலிஆகியோர் தலைமை தாங்கினார்கள் சிறப்பு விருந்தினராக காவல் துணை கண்காணிப்பாளர்,
ஜி கே ராஜு முகாமை துவக்கி வைத்தார். .
கும்பகோணம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் சுகந்தி முன்னிலையில் குழுவினர் ரத்தம் சேகரித்தனர். 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு, பழ ஜூஸ் வழங்கப்பட்டது