தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, திருச்சி மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எம். கிறிஸ்டோபர் தலைமை தாங்கி, 20,669 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதில் 5,882 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.52 கோடியே 82 லட்சத்து 43 ஆயிரத்து 840 வழங்கப்பட்டது. முசிறி, துறையூர், லால்குடி என திருச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில், பல்வேறு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *