கோவை நிர்மலா மகளிர் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் , தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது “மஞ்சப்பையுடன் பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு” மற்றும் செயல்திறன் மிக்க திடக் கழிவு மேலாண்மையுடன் கூடிய ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது..
கல்லூரி செயலாளர் அருட்சகோதரி டாக்டர் ஏ. குழந்தை தெரஸ் மற்றும் முதல்வர் அருட்சகோதரி டாக்டர் ஜி. எஸ். மேரி ஃபபியோலா ஆகியோர் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது..
இதில்,கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தெற்கு அலுவலகம், சதீஷ் குமார், கோயம்புத்தூர் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கால் உண்டாகும் சுற்றுச்சூழல் அபாயங்கள் குறித்து விளக்கி, தமிழரின் பசுமைச் சின்னமான மஞ்சப்பையை மீண்டும் பயன்படுத்தும் நடைமுறையை ஊக்குவித்தார்.
இரண்டாவது அமர்வை மாற்றம் ஆன் டிரஸ்ட் அமைப்பின் நிபுணர்கள் வழி நடத்தினர் பேரூர் பகுதி,திடக் கழிவு மேலாண்மை பொறுப்பாளர்,துணை தலைவர் , பூபதி சரவணகுமார், பிளாஸ்டிக் கழிவு அதிகரிப்பு, கழிவு பிரித்தல், உரமிடல் மற்றும் சமூக கண்காணிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
MSW தலைவர் சுரேஷ், புதுமையான திடக் கழிவு மேலாண்மை நுட்பங்கள் குறித்து விளக்கி, நிலையான கழிவு மேலாண்மை என்பது ஒவ்வொரு தனிநபரின் தலையாய பொறுப்பு என்று வலியுறுத்தினார்.
நிகழ்வின் போது மாணவிகள் நெகிழி பைகளை (பிளாஸ்டிக் பைகளை) தவிர்க்க வேண்டும் என உறுதிமொழி எடுத்தனர், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய அவர்களின் உறுதியையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தியது..
மேலும், கல்லூரியில் 2021 முதல் மாணவிகளால் தைத்து, கைவரையப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய,சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தறி துணிப்பைகள் காட்சிப்படுத்தப்பட்டன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை EDC குழு தலைவர் டாக்டர் என். கிருஷ்ணவேணி மற்றும் குழு உறுப்பினர்கள் மேற்கொண்டனர்.