மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட சிக்கந்தர் சாவடியில் காவல்துறை மற்றும் பொதுமக்களுக் கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சமயநல்லூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமை ஏற்று பொது மக்களுக் கான விழிப்புணர்வு கள் குறித்து விளக்க உரையாற்றினார் குறிப்பாக பொதுமக்கள் அந்தந்த குடியிருப்பு பகுதி சங்கங் களுடன் இணைந்து குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமி களுக்கு இருசக்கர வாகனத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் போன்ற அறிவுரைகள் மற்றும் பெற்றோர் கள் தங்கள் பிள்ளை களுடைய ஒவ்வொரு செயல்பாடு களையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியும், குறிப்பாக தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் போது அவர்களின் பயன்பாட்டை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் இதுபோன்ற நடவடிக்கைகளால் பெரும்பாலும் குற்றச்செயல்கள் நடைபெறாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினார்.
பொதுமக்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்படும்போது பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் இருந்து மீளமுடியும் என்று கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு குடியிருப்போர் நல சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லுர் காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ், தலைமை காவலர் சுரேஷ் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.