திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் கிராமப்புற சுகாதார திட்டத்தை செயல்படுத்துவதன் 25வது ஆண்டு தினத்தை முன்னிட்டு திருவாரூர் விளமல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முன்னதாக தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது அவசியம் குறித்து இரு சக்கர வாகன ஹெல்மெட் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி சாலை விதிகளை மதிப்போம் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணி விளமல் பாலம் முதல் மன்னார்குடி சாலை வழியாக சென்று ஆயுதப்படை மைதானம் வரை சென்று நிறைவடைந்தது.
இந்த பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கருட், துனை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், ஊரக முகமை திட்ட இயக்குநர் பல்லவி வர்மா, வருவாய் கோட்டாட்சியர் சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.