மதுரை யா.புதுப்பட்டியைச் சேர்ந்த விஸ்வநாதன். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களது மகள் சந்தியா. மாற்றுத்திறனாளியான சந்தியா, திண்டுக்கல்லில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறார். பேட்மின்டன் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர், மாநில, தேசிய போட்டி களில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் துபாயில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக் கான ஆசியன் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகம் சார்பில் சென்று பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் விளையாடி தங்கம் வென்று சாதனை படைத்தார். துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தங்க மங்கை சந்தியாவை விமான நிலையத் தில், பாரா ஒலிம்பிக் தடகள பயிற்சியாளர் ரஞ்சித்குமார், பெற்றோர் விஸ்வநாதன், கனகலட்சுமி மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாணவி சந்தியா,கூறும்போது. “14 பிரிவுகளில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பேட்மின்டன் போட்டியில் 18 பேர் கலந்து கொண்டோம். இந்திய அணி சார்பில் மொத்தம் 9 தங்கம், 6 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளோம்.
இந்தோனேசியாவிற்கு எதிரான போட் டியில் வெற்றி பெற்று தங்கம் வென்றது எனக்கு பெருமையாக உள்ளது.முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எனக்கு ஊக்கமளித்த பெற்றோர், பயிற்சியாளருக்கு நன்றி” கூறிக்கொள்கிறேன் என்றார்.