கம்பம் நகரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் தொடங்கி வைத்தார்

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகரத் தந்தை ராமசாமித் தேவர் கம்பம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஓ ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் நினைவு தினத்தையொட்டி மாவட்ட அளவிலான கபடி போட்டி கம்பம் நகரில் நடைபெற்றது இந்த போட்டியை தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்ற மாபெரும் மக்கள் இயக்கமான நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் மனித நேயர் பண்பாளர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கபடி போட்டியை துவக்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் கபடி போட்டியில் பங்கேற்ற கபடி வீரர்கள் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் கூடல் செல்வேந்திரன் கம்பம் தொகுதி செயலாளர் அபுதாகிர் கம்பம் நகர செயலாளர் சுப்பிரமணியன் மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் நந்தகுமார் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார் உள்பட நமது மக்கள் முன்னேற்ற கழக மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக நமது மக்கள் முன்னே ற்ற கழக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கபடி போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து கபடி வீரர்கள் 48 அணிகள் கலந்து கொண்டனர் போட்டியின் முடிவில் பல்வேறு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *