கரூர் செய்தியாளர் மரியான் பாபு

விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு..
கரூர் பரணி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டுதல் மையம் (Career Guidance Centre) சார்பில், இன்று “விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு” (Meet The Scientist) என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கான்பூரிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR – CLRI) விஞ்ஞானி முனைவர் ஜெய பிரகாஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியின் போது,மாணவர்கள் ஆர்வத்துடன் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.குறிப்பாக, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு அறிவியல். நிறுவனங்கள், விஞ்ஞானியாக உருவெடுப்பது எப்படி, மற்றும் படிப்பு சார்ந்த இலக்குகளில் கவனத்தைச் சிதறாமல் செலுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாகக்கேட்டறிந்தனர்.

மேலும்,ஐ.ஐ.டி (IIT), என்.ஐ.டி (NIT) போன்ற இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான வழிமுறைகள் குறித்தும் விஞ்ஞானி முனைவர் ஜெய பிரகாஷ் மாணவர்களுக்குத் தெளிவான விளக்கங்களை அளித்தார்.இந்நிகழ்ச்சிக்கு பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ். மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மற்றும் அறங்காவலர் சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி. ராமசுப்ரமணியன் வழிகாட்டுதலின்படி, பள்ளி முதல்வர் சுதாதேவி, உயர்கல்வி வழிகாட்டுதல் மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பிரியா, மற்றும் ஒருங்கிணைப்பாளர்ஜெர்லின் கிரிஸ்டல் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *