செய்தியாளர் சீனிவாசன்.

பெரியபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் கவரை தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் 33.ஆம் ஆண்டு ஐயப்ப சுவாமியின் திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு வாழ மரப்பட்டையில் 18 படிகளை அமைத்து வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்து அதில் ஐயப்பனை அமர்த்தி உற்சவர் ஐயப்பனுக்கு பால், சந்தனம், தயிர்,இளநீர், தேன், ஜவ்வாது, மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பட்டாடையில் வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து தீபமேற்றி ஐயப்ப பக்தர்கள், பொதுமக்களும் கலந்துகொண்டு பஜனை பாடல்களை பாடினர்.

தொடர்ந்து 18 கற்பூர தீபங்களை ஏற்றி தீப,தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கும், அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பச்சையப்பன்,கோபி தலைமையில் கொண்ட ஐயப்ப சுவாமி பக்தர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *