தாராபுரம், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின், மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கான ஆலோசனைக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சி.மனோகரன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.பொன்னம்மாள் வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைப்பு குழு கவுர ஆலோசகர் செ.தமிழ்வேள், மாநில தலைமை நிலையச் செயலாளர் க.சுரேஷ்குமார், மாநில அமைப்பு செயலாளர் த.சுப்பிரமணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இதில், 2011 ஆம் ஆண்டுக்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், எஸ்சி/ எஸ்டி ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கூட்டமைப்பின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ச.செல்லதுரை, தேனி மாவட்ட செயலாளர் ப.ஜெயராம், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கருப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.