செங்குன்றத்தில், பெருமானார் நபியின் மீது புகழ்பாடும் பேரவை மற்றும் ஆசிகுர்ரசூல் பேரவை இணைந்து நடத்தும் 1,500 வது மீலாதுன் நபி விழா, நாகூர் நாயகத்தின் கந்தூரி விழா மற்றும் கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஆலீம் விருது வழங்கும் முப்பெரும் விழா,
செங்குன்றம், பஜார் அருகிலுள்ள இலாஹி பள்ளிவாசல் வளாகத்தில், உலமா பெருமக்களின் சிறப்புரையுடனும், இஸ்லாமிய மக்களின் பிரார்த்தனையுடன் விமரிசையாக நடைபெற்றது.

செங்குன்றம் ஆயிஷா பள்ளிவாசலின் தலைமை இமாம் அல்ஹாஜ் டாக்டர் காஜா மைதீன் ஜமாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சண்முகபுரம் பள்ளிவாசல் இமாம் முஹமது அலி துஆஓதி விழாவை துவக்கி வைத்தார். இமாம் அபுல் ஹசன் பிலாலி விழாவை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்க சுற்று வட்டார அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் பேரவை நிர்வாகிகள் மற்றும் பெருமக்களும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். மேலும் உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ஷேக் அப்துல்லா ஜமாலி , அடையாறு மஸ்ஜித் தலைமை இமாம் அஹமது ஃபாஜில் பாகவி ஆகியோர்கள் நபிகளாரின் இறை நம்பிக்கையை போற்றும் விதமாக அனைவரும் கண்ணியத்துடன் கடைபிடிக்க வலியுறுத்தி சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில் செங்குன்றம், மொண்டியம்மன் நகர், பாடியநல்லூர், வடகரை, புழல், காவாங்கரை சுற்றுவட்டாரங்களை சேர்ந்த இஸ்லாமிய பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மவ்லவி அப்சலுல் உலமா எம். முஹம்மது ஆஷிக் மன்பயீ ஆகியோர் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *