திருவாரூர் மாவட்டம் வலங்கைமானிலிருந்து குடவாசல் செல்லும் சாலை திருவாரூர் – தஞ்சாவூருக்கு இணைப்பு சாலையாக உள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக குழாய்கள் பொருத்தப்பட்டதால் சாலை பழுதடைந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை குடவாசல் உட்கோட்டம் வலங்கைமான் பிரிவு மூலம் சுமார் மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிஆர்ஜடிபி 2025-26 மூலம் சாலையினை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.