C K RAJAN
Cuddalore District Reporter
9588471235…

கடலூரில் லகு உத்தியோக் பாரதி செயற்குழு லகு உத்தியோக் பாரதி கடலூர் மாவட்டத்தின் புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் தொடர்பாக செயற்குழு நடைபெற்றது.

தேசிய செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கல்யாணசுந்தரம் வரவேற்புடன் லகு உத்தியோக்பாரதி செயற்குழு நடந்தது.

செயற்குழுவில் சிறப்புரையாற்றிட மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் விஜயகுமார், முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், இசிக் மேலாளர் லூர்துசாமி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள் இதில் மாவட்ட தொழில் மைய பொதுச் செயலாளர் திட்டங்கள் சலுகைகள் மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

இச்செயற்குழுவில் அசோக் குமார் தலைவராகவும், தேவநாதன் செயலாளராகவும், ரமேஷ் பிரபாகர் துணைத் தலைவராகவும், பூங்குயிலன் இணை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றி என் ஐ ஆர் டி இயக்குனர் பாலசுந்தரம் மற்றும் தேசிய உற்பத்தி கவுன்சிலின் துணை இயக்குனர் விஜயராஜ் லீன் திட்டத்தை பயன்படுத்தி சிறு தொழில்கள் எவ்வாறு அதிக லாபம் ஈட்டுவது குறித்து எடுத்துரைத்தார். மேலும் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் அமர்வும் இச்செயற் குழுவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுச்சேரி மாநில தலைவர் விஸ்வேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் அசோக், விழுப்புரம் மாவட்ட தலைவர் தனகோபால், செயலாளர் ராஜேஷ்,மாநில செயற்குழு உறுப்பினர் சந்தோஷ் குமார் மற்றும் தொழில் முனைவோர்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *