தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ.மிதுன்சக்கரவர்த்தி தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தனர்

இதனைத் தொடர்ந்து பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ.மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் திமுக பேரூர் திமுக அவைத் தலைவர் ஜோதிராம் பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் மு க ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி அமையவும் திமுக அமோக வெற்றி பெற திமுக வார்டு செயலாளர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்பது குறித்து திமுக கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *