பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா முன்னிட்டு பொதுமக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட குன்றத்தூர் ஒன்றிய பகுதியில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அளிக்கும் முகாம் அமைத்துக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குன்றத்தூர் மேற்கு மண்டலைச் சார்ந்த நிர்வாகிகள் மேலும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கு கொண்டு சிறப்பித்தனர் . எழுபதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.