தேனி வடக்கு மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெய மங்கலத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் மகாத்மா காந்தி பெயரில் செயல்பட்டு வந்த கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை மத்திய பாஜக அரசு சீர்க்குலைத்துள்ளது. இதற்கு ஆதரவான நிலையை அதிமுக எடுத்துள்ளது.
இது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குழைக்கும் அநீதி ஆகும். கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2004ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை உறுதி திட்டத்திலிருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கி உள்ளனர். மத்திய அரசு வழங்க வேண்டிய சம்பளத் தொகையில் 40 சதவீதம் மாநில அரசு வழங்க வேண்டும் என்று சட்டத்தை திருத்தியுள்ளனர்.
மொத்தத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ளனர்.மத்திய அரசின் மக்கள் விரோத பாஜக அரசின் போக்கைக் கண்டித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தேனி வடக்கு மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் வடக்கு ஒன்றிய செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் முன்னிலையில் வண்டி பெரியகுளம் அருகே உள்ள ஜெய மங்கலத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் ச. பால்பாண்டி தென்கரை பேரூராட்சி மன்ற தலைவர்வி. நாகராஜ் வடுகபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சி. நடேசன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.