கூட்டமைப்பின் தேசிய மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இதில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு வரவேற்பு

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 2026-27 ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்ட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜே.ஆர். அரங்கில் நடைபெற்றது…

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஹென்றி மற்றும் தேசிய ஆலோசனை குழு தலைவர் நேரு நகர் நந்து ஆகியோரின் ஆலோசனையின் பேரில் எட்டாவது நிர்வாக தேர்வாக நடைபெற்ற இதில்,தேசிய செயல் செயலாளர் செந்தி்ல் குமார் தலைமை தாங்கினார்..

தேசிய இணை செயலாளர் கண்ணன் என்கிற பாலசண்முகம் மற்றும் தேசிய துணை செயலாளர் பாலசுப்ரமணி,ஆலோசனை குழு உறுப்பினர் நிவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

முன்னதாக ஃபெயிரா கூட்டமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களை தேசிய செயல் செயலாளர் செந்தி்ல் குமார் அறிமுகம் செய்து வைத்தார்..

தொடர்ந்து நிகழ்ச்சியில் ,ஃபெயிரா கூட்டமைப்பின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து புதிதாக இணைந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பேசினார்..

இதில், ரியல் எஸ்டேட் துறையில் தொழில் செய்து வரும் தொழில் துறையினருக்கு ஃபெயிரா எப்போதும் உடன் இருக்கும் என உறுதி தெரிவித்தார்..

தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கையேடு வழங்கப்பட்டது…

கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக மாவட்ட தலைவர் அந்தோணி சாமி,பொது செயலாளர் மெடிக்கல் நாராயணன்,மாவட்ட செயல் செயலாளர் ஜெகந்நாதன் ,செயலாளர் மாவட்ட வளர்ச்சி சண்முகம் உட்பட 30 க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்…

நிகழ்ச்சியை ஃபெயிரா கூட்டமைப்பின் ஆர்க்கிடெக்ட் மற்றும் பொறியாளர் குழுவின் மாநில செயற்குழு உறுப்பினர் பொறியாளர் தேஜஸ்வினி தொகுத்து வழங்கினார்..

கூட்டத்தில் மாநில துணை தலைவர் சுரேஷ்குமார்,மாநில செயற்குழு தலைவர் ராமநாதன்,கோவை மாவட்ட தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,கனலி என்கிற சுப்பு செந்தில் குமார்
உட்பட தேசிய,மாநில,மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *