மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் நிறுவனர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர் திருமதி உமா மகேஸ்வரி வரவேற்பு ரையாற்றினார்.
பள்ளியின் நிர்வாக அறங்காவலர் திரு. கே. ராமசாமி தலைமை உரையாற்றினார் பள்ளி செயலர் சிந்தனை கவிஞர் கவிதாசன் வாழ்த்துரை வழங்கினார் .

பள்ளியின் முன்னாள் மாணவர்கள் செல்வி ஸ்வேதா சுப்பிரமணியன் கிருஷ்ண பிரசாந்த்IFS ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் அதைத் தொடர்ந்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக, பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியை அடுத்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *