பெரம்பலூர்.டிச.31. துணை முதலமைச்சர் உதயநிதி ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கியதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி வீரர், வீராங்கனைகளுக்கு போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் கிராமங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் புத்துணர்ச்சியோடும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகவும், அனைத்து ஊராட்சிகளுக்கும் “டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்” கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்கள்.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக துணை முதலமைச்சர் ஈரோட்டில் நகர்ப்புறங்களுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்கிடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி மற்றும் லப்பைகுடிகாடு ஆகிய நான்கு பேரூராட்சிகளிலும் உள்ள வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்த விளையாட்டு உபகரண தொகுப்பில், கிரிக்கெட், கையுந்துப் பந்து, எறிபந்து, கால்பந்து, டென்னிக்காய்ட், ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், செஸ், கபாடி, இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள், உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் டி ஷர்ட், விசில், கோன்ஸ், தொப்பி உள்ளிட்ட 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் நகராட்சி மற்றும் நான்கு பேரூராட்சிகளில் உள்ள 81 வார்டுகளுக்கு 102 விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு தொகுப்பிலும் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில், அட்மா தலைவர் ஜெகதீசன், பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), பாக்கியலெட்சுமி (பூலாம்பாடி), ஜாஹிர் உசேன் (லெப்பைக்குடிக்காடு), வள்ளியம்மை ரவிச்சந்திரன் (அரும்பாவூர்), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், துரைசாமி, கல்லூரி முதல்வர் கீதப்பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற்கொடி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *