C K RAJAN
Cuddalore District Reporter
9488471235

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய பொதுமக்களுக்கு பொருளாதார வேறுபாடின்றி உயர்தரமான சிகிச்சையினை வழங்கிட வேண்டும் என்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் ஏராளமான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மருத்துவ சேவைகளை வழங்கிடும் பொருட்டு அரசு மருத்துவமனைகளில் கூடுதல் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் மருத்துவ உபகரண வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிதம்பரம் நகரப்பகுதி மக்களின் நலன் கருதி சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட கனிம வள நிதியின் கீழ் ரூ.5.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அவசர பிரிவு கட்டத்தினை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மருத்துவமனைக்கு தேவையான குடிநீர் வசதிகளை வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக வழங்கிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, பொது மருந்தகம், தொற்றாநோய் மருந்தகம், காது மூக்கு தொண்டை பிரிவு, தாய்சேய் அவசர மையம், சமையலறை உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சை பெறவந்த பொதுமக்களுக்கு மருத்துவமனையால் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் தேவைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார் நகராட்சி ஆணையாளர் மல்லிகா துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *