உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி சிறுவர் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த எம் எல்.ஏ.தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இந்த பகுதி பொதுமக்கள் சிறுவர் சிறுமிகள் விளையாட சிறுவர் விளையாட்டு பூங்கா அமைத்து தர வேண்டும் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் இராமகிருஷ்ணன் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் பேரூராட்சி செயல் அலுவலர் தி. சீனிவாசன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர் இந்த மனுவை உடனுக்குடன் பரிசீலனை செய்து சிறுவர் பூங்கா கட்டி முடிக்கப்பட்டது புதியதாக கட்டப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பண்பாளர் கம்பம் என். ராமகிருஷ்ணன் எம் எல் ஏ திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சூ. ராஜேந்திரன் பேரூராட்சி செயல் அலுவலர் தி. சீனிவாசன் துணைத் தலைவர் விஜய பாண்டியன் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜீவராஜ் அலுவலக உதவியாளர் ராஜ்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வெகு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்