திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆங்கிலப் புத்தாண்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்பட்ட இந்நிகழ்வினை விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தாளாளர் மற்றும் செயலர் முனைவர். கருணாநிதி தொடங்கி வைத்தார்.
புத்தம் புது சிந்தனைகள் விடியலின் எழுச்சியோடு மனதிலே உதயமாகி புது வெள்ளமென தரணியில் இன்பங்கள் பொங்கட்டும் எனப் புது வருடத்தை வரவேற்று கல்லூரியின் முதல்வர் முனைவர். பேபி ஷகிலா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரியின் செயல் இயக்குநர் முனைவர். குப்புசாமி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர். பாலகுருநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேக் வெட்டியும், கடந்த வருடங்களில் நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு புது வருடத்தில் புதுமைகளோடு வாழ வேண்டும் என்று உரையாற்றி புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறினார்.
இந்நிகழ்வில் 5000க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே வண்ண நிறம் உடைய பலூன்களை வானத்தில் பறக்க விட்டும், கேக் வெட்டியும், டி. ஜே. மற்றும் ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் புத்தாண்டு பதாகைகளை வெளியிட்டுப் புது வருடத்தை வரவேற்று மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர். தீனதயாளன் , உள்தர உறுதி குழு இயக்குநர் முனைவர் பிரசாத், துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் போன்றோர் கலந்துகொண்டனர், இந்நிகழ்வினை வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர். பூங்காவனம் ஏற்பாடு செய்திருந்தார்.