காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

ஊதியூர் அருகே அதிர்ச்சி சம்பவம்: மனநலம் பாதிக்கப்பட்டவர் திடீரென தானே தீ வைத்துக் கொண்டு உயிரிழப்பு

சாலையோரம் பரபரப்பு, பதற்றத்தில் பொதுமக்கள்: விசாரணையில் போலீசார்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்.
தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட என். காஞ்சிபுரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென தானே தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் 55 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கடந்த பல நாட்களாக சாலையோரங்களில் சுற்றித் திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகக் கடைக்காரர்கள் அவ்வப்போது உணவு வழங்கி உதவி செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று திடீரென அவர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி, அதை தனது உடலில் ஊற்றி, தானே தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தீப்பிடித்த நிலையில் அந்த நபர் சாலையோரமாக ஓடிச் சென்றதாகவும், பின்னர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் சரோஜா விசாரணை மேற்கொண்டு வருகின்றார் உயிரிழந்தவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர், அவரது பெயர் என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பகல்நேரத்தில் நடந்த இந்த திடீர் சம்பவத்தால் எண் காஞ்சிபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு மற்றும் பதற்றம் நிலவியது. போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தி, பொதுமக்களை அமைதிப்படுத்தினர். சம்பவம் தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *