தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில், பட்டாசு முழங்க செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு.
தாராபுரம்–காங்கயம் தாவேக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சிறப்பான வருகை!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் :தமிழக வெற்றி கழகத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம்–காங்கயம் செயல்வீரர்கள் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த மேற்கு மண்டல அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் அவர்களுக்கு, தாவேக வடக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தாராபுரம் புறவழிச்சாலை நஞ்சியம்பாளையம் பகுதியில் ட்ரம் செட் மேலங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்க, பூங்கொத்து வழங்கி ரோஜா மாலை அணிவித்து பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.கழகத் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உற்சாகம் காட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.