அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிசாமி என்ற நபர் அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். மரம் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் இயற்கை மீது கொண்ட பற்றின் காரணமாக, இயற்கையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் இதற்கு முன்பு காவல்துறையில் 5ஆண்டுகள் பணியாற்றி வந்த நிலையில் அந்தப் பணியை ராஜினாமா செய்து விட்டு தற்போது அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2025- ஆம் ஆண்டு முழுவதும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்தார். அதன் படி தற்போது ஊட்டி பந்தலூர் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தனது பயணத்தின் ஆறாவது நாளாக திருவாரூர் மாவட்டம் வந்தடைந்தார். இயற்கை அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பயணம் மேற்கொண்டு வரும் அவரை வனம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்தினர்.