துறையூர்
திருச்சி மாவட்டம், துறையூரில் “தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை” அறிவித்த முதலமைச்சருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருக்கும் தா.பேட்டை மற்றும் துறையூர் ஒன்றியம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்த படி பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ் நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை”(ஜனவரி -03) அறிவித்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டு காலக் கோரிக்கை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜனின் வழிகாட்டுதல் படி, திருச்சி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வை.விஜயகுமார் தலைமையில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் க.பூபாலன் முன்னிலை வகித்தார்.மேலும் இதில் மாவட்ட துணை தலைவர் ந.கிருஷ்ணமூர்த்தி, துறையூர் வட்டார செயலாளர் ரெ.பிரகாஷ், பொருளாளர் ரா.ஞானசேகரன்,துறையூர் வட்டார தலைவர் வெ.முருகராஜ், தா.பேட்டை வட்டார செயலாளர் சே.விஜயகுமார், தா.பேட்டை வட்டார தலைவர்
பெ.நல்லதம்பி,மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் மு.கருணாகரன்,ஆதி திராவிடர் பழங்குடியினர் துறை சார்பில் செல்ல பெருமாள்,ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரிவில் விஜயன், உறுப்பினர் பூபாலன் உள்ளிட்ட துறையூர் மற்றும் தா.பேட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்வின் நிறைவில் மாநில செயற்குழு உறுப்பினர் வே.ராஜா நன்றியுரை ஆற்றினார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *