கோவை அடுத்த கோவைப்புதூரில் உள்ள வி எல் பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் உழவர்களுக்கு வணக்கம் என்ற தலைப்பில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது, ஜானகியம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சூரியகுமார் தலைமை தாங்கினார்,
விழாவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு பழனிச்சாமி, மாவட்டத் துணைத் தலைவர் பெரியசாமி, கீரை கடை வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீராம் பிரசாத், போத்தீஸ் ரீடைல் நிறுவன மேற்கு மண்டல துணைத் தலைவர் சக்தி நாராயணன், ஆலந்துறை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ராமமூர்த்தி, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டி- எலைட் கே அருள், தாய் தமிழ் அகடாமி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ் பால்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்,
கல்லூரி முதல்வர் கலைவாணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் பிருந்தா ஆகியோர் பேசினார். நிகழ்ச்சியில் 80 விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர் அதை தொடர்ந்து கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் இன்கியூபேஷன் மற்றும் ஸ்டார்ட் அப் மையம் ஆகியவை சார்பில் விவசாயிகள் கொண்டு வந்த இயற்கை காய்கறிகளுடன் ஸ்பாட் சந்தை நடத்தப்பட்டது
இதற்கான ஏற்பாடுகளை சமூக ஈடுபாடு மற்றும் சமூக சேவை மையம், நம்மாழ்வார் கழகம் மற்றும் வணிகவியல் கணினி பண்பாட்டு துறையினர் இணைந்து செய்தனர்.