‘உலகம் உங்கள் கையில் திட்டத்தில்’ கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொர்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 2 ஆயிரத்து 321 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி பார்த்திபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *