தேனியில் உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கிய மாவட்ட கலெக்டர் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை வர்த்தக மையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான உலகம் உங்கள் கையில் என்ற விழாவில் தமிழகம் முழுவதும் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் முதற் கட்டமாக 408, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர்மன்ற தலைவர்கள் தேனி ரேணு பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் சின்னமனூர் அய்யம்மாள் ராமு கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை பேரூராட்சி மன்ற தலைவர்கள் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி தேவாரம் லட்சுமி பால் பாண்டி கோம்பை முல்லை மோகன் ராஜா அனுமந்தன் பட்டி ராஜேந்திரன் கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் பண்ணைப் புரம் லட்சுமி இளங்கோ மார்க்கையன்கோட்டை ஒ.ஏ.முருகன்.குச்சனூர் பி.டி.ரவிச்சந்திரன் வீரபாண்டி கீதா சசி பழனிசெட்டிபட்டி வி.பி.ஏ.மிதுன் சக்கரவர்த்தி தென்கரை வி.நாகராஜ் தாமரைக்குளம் ச. பால்பாண்டி வடுகபட்டி சி .நடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.