பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் இறகு பந்து போட்டி-அன்பழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் இறகு பந்து போட்டி ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு இறகு பந்து போட்டியினை துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை நாகை திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இறகு பந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பை ,சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *