எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு புள்ளி மானை மீட்டு வனத்துறை விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் அருகே பாதரக்குடி கிராமத்தில் இன்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் மூன்றரை வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. ரயில் பாதையை சோதனையிட சென்ற கீ மேன்கள் மான் இறந்து கிடப்பதைக் கண்டு ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் மயிலாடுதுறை ரயில்வே போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் இறந்த கிடந்த மானை கைப்பற்றி சீர்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் மானை எடுத்துச் சென்று சீர்காழி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்த பின்னர் கொள்ளிடம் காப்பு காட்டில் புதைக்க உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *